அருகில்

96 9 3
                                    

எத்தனை வரங்கள் சூழ்ந்தாலும் தாய் மண் வித்தினை சுவைப்பது போல் வருமா! வானுயர வளர்ந்த கட்டிடம், நம் புழுதியில் விளைந்த பனைக்கு இணையாகுமா!

மூவரும் நல்ல முறையில் தாய் நாட்டை வந்தடைந்தனர். சுமித்ரா தனது வேலையை வீட்டாரிடம் கூறியபோது பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். திங்கட்கிழமையும் வந்தது. தனது வாழ்வில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்தாள். அதன் ஆரம்பமும் விக்ரமாக வேண்டும் என விரும்பி் ஆலம்நிழலின் அடியில் விக்ரமின் ஆசிர்வாதத்திற்காக காத்திருந்தாள்.

" விக்ரம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

" விக்ரம்..  என் கண்ணுக்கு உன்ன தெரியாத போதிலும் ஒனக்கு என்ன தெரியும்.. நா ஒரு ஜொப்கு போக போறேன்.. எனக்கு ஆசிர்வாதம் பண்ணு.. என்ன நல்ல படியா வழியனுப்பு.. "

என கண்ணீர் வடித்த நிலையில் ஆலம் தண்டில் தலைசாய்த்து சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். சில்லென்று ஓர் தென்றல் அவள் மடியில் ஓர் மலருடன் தவழ்ந்தது. அதை தன் கைகளுக்குள் புதைத்து சிரித்தவளாய் அழுது நின்றாள். விக்ரமின் ஆசிர்வாதம் பெற்ற சந்தோஷத்துடன் தொழிலிற்குப் புறப்பட்டாள்.
ஊதா நிற மலர் மஞ்சரியுடன் ப்பி. எ அவர்களும் ஏனைய தொழிலாளர்களும் சுமித்ராவின் வருகைக்காக காத்திருந்தனர். சுமித்ராவும் உரிய நேரத்தில் அங்கு சென்றடைந்தாள். மலர் மஞ்சரியை கையில் கொடுத்து

ப்பி.எ : வெல்கம் மெடம்.. திஸ் ஈஸ் ப்ரொம் அவ கம்பனி..

சுமித்ரா : தேன்க் யூ.. தேன்க் யூ ஓல் டு வெல்கம் மீ..

ப்பி. எ : கம் லெட்ஸ் கோ மெடம்.. ஐல் சோ யுஅ கெபின்..

சுமித்ரா : ம்..., தென்க் யூ..

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Where stories live. Discover now