நான் பாத்துக்கறேன்.. நீங்க கிளம்புங்க வெண்ணிலா..
"இல்ல சார்.. நானும் இருக்கேன்.. " என்று அவள் கூற..
மணியை பார்த்தவன் அவளிடம் எதுவும் கூறாமல் வேலையை தொடர்ந்தான்..
அவன் வேலை செய்வதையே பார்த்தவளுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்று புரிந்தது..
சூப்பர் சார்.. இது எனக்கு ஸ்டரைக் ஆகவே இல்ல..
நீங்க இந்த அளவு பன்னுனதே பெரிய விஷயம்.. எல்லாம் முடிஞ்சுருச்சு.. ஒரு மெயில் மட்டும் பண்ணுங்க டெஸ்டிங் டீம்கு..
"ஓகே சார்.. " என்று கூறிவிட்டு அவன் கூறியதை போல் டெஸ்டிங் டீம்கு மெயில் அனுப்பிவிட்டு அவள் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்..
ஆங்காங்கே ஒரு சில வாகனங்கள் மட்டுமே செல்ல.. அப்பொழுது தான் மணியை கவனித்தால்.. மணி 10.50 ஆகி இருக்க.. அவ்வளவு தூரம் சென்று சேரும் பொழுது மணி 12 க்கு மேல் ஆகிவிடும்..
பஸ்ஸில் சென்றாலும் அங்கு இருந்து இறங்கி அவளது ஹாஸ்டல் செல்ல 15 நிமிடம் மேல் நடக்க வேண்டும்.. பஸ் சீக்கிரம் வர வேண்டும் என்ற வேண்டுதல் உடன் நின்று இருந்தால்..
அப்பொழுது அவளை உரசி கொண்டு ஒரு பைக் வந்து நின்றது.. அதில் சற்று பயந்தவள் பின்னால் நகர..
"ஏறு.." என்ற குரலில் தலை நிமிர்த்தி பார்த்தவள் பைக்கில் வந்தவன் ஜெகன் என்று அப்பொழுது தான் உணர்ந்தாள்..
இல்ல சார்.. நான் பஸ்ல போய்பேன்..
நாளைக்கு நியூஸ் பேப்பர்ல ஹெட் லைன்ஸ்ல வரணும்னு ஆசையா இருக்கா??
அவள் பயந்து விழிக்க..
ஏறு.. நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. சீக்கிரம் போய் படுக்கணும்...
அவன் கூறியதை கேட்டவள்.. இனி தான் தனியாக சென்றாலும் அவன் கூறியதை போல் பாதுகாப்பு இல்லை... ஆகையால் அவனுடனே சென்று விடுவது என்று முடிவு எடுத்து பைக்கில் அமர்ந்தாள்..