ஜெகனின் அலைபேசி அவனை விடாமல் அழைக்க... அதில் தெரிந்த பெயரை பார்த்தவன் அதை எடுக்காமல் அலட்சியம் செய்துவிட்டு தூங்க ஆரம்பித்தான்...
இரவு தூங்க வெகு நேரம் ஆகியதால் காலை கண் விழித்த வெண்ணிலா மணியை பார்க்க அது 8 என காட்டியது... பதட்டமாக எழுந்து புறப்பட ஆரம்பித்தாள்.. எவ்வளவு விரைவாக கிளம்பியும் அவளால் ஆபீஸ்ஸிற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியவில்லை...
இங்கே ஜெகனோ ஏதோ சத்தம் அவன் வெகு அருகில் கேட்டுக்கொண்டே இருக்க.. அதில் மெல்ல கண் விழித்தான்.. விடாமல் வந்த சத்தம் அவன் அலைபேசியில் என்பதை அறிந்தவன் அதை எடுத்து பார்க்க அர்ஜுன் என்ற பெயரில் 30 மிஸ்ட் கால் மேல் இருக்க அதை கண்டுகொள்ளாமல் ஆபீஸ் கிளம்பினான்..
ஜெகன் ஆபீசில் நுழையும் பொழுது மணி 11.50 ஆகி இருந்தது.. அவனது கேபின்குள் செல்லும் பொழுது நேஹா ஏதோ கோபமாக வெண்ணிலாவிடம் பேசுவது தெரிய இவன் அதை கவனித்து கொண்டே உள்ளே சென்றான்..
அவன் உள்ளே நுழைந்ததை பார்த்த நேஹா வெண்ணிலாவிடம் சொன்ன வேலையை சீக்கிரம் முடிக்க சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள்..
இதையெல்லாம் கவனித்து கொண்டு வந்தவன். அவன் சிஸ்டம்மை ஆன் செய்து வேலையை ஆரம்பித்தவனுக்கு சிறிது நேரத்தில் ஏதோ சற்று வித்தியாசமாக மனதை நெருடியது..
பக்கத்தில் திரும்பி பார்த்தான்.. அங்கே வெண்ணிலா முகத்தை கீபோர்ட்குள் புதைத்து கொண்டு தீவிரமாக ஏதோ தேடிக்கொண்டு இருந்தால்..
அவளது குட் மார்னிங் மிஸ் ஆனதை அப்பொழுது தான் உணர்ந்தவன்.. நேஹா கூறி சென்ற வேலையையும் தன்னிடம் அவள் விவரிக்கவில்லை என்பதையும் உணர்ந்தான்...
அவன் வந்ததில் இருந்து அவள் நிமிராமல் இருப்பதையும் உணர்ந்து அவளை பார்க்க.. எங்கே அவள் நிமிர்ந்தால் தானே... பின்பு என்ன நினைத்தானோ தோளை குளிக்கிவிட்டு அவன் வேலையை தொடர்ந்தான்..
15 நிமிடம் ஆகி இருக்க அவன் இருக்கையில் இருந்து எழுந்தவன் தண்ணீர் குடிக்க சென்றான்... வாட்டர் ப்யுரிபையர்ரில் இருந்து அரை கிளாஸ் தண்ணீர் நிரப்பியவன் அதை 5 நிமிடம் முழுதாக ரசித்து ரசித்து குடித்து முடித்துவிட்டு வந்து அவன் இருக்கையில் அமர்ந்தான்..