எண்ணமெல்லாம் உன் வசமே

1.2K 54 5
                                    

அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்த ஹரிஷுக்கும் விடியவே கூடாது என வேண்டிய ஸ்மிதாவுக்குமாய் பொழுது விடிந்தது.

இரவு முழுவதும் அறையில் தோழிகள் அவனைப் பற்றி அடித்த comments ஐ தாங்கமுடியாமல் வெகுநேரம் கழித்தே உறங்கினாள் ஸ்மிதா.

காலையில் அனைவரும் பல அரிய வகை தாவரங்கள் இருக்கும் பூங்கா ஒன்றிற்கு சென்றனர். அனைவரையும் சிறு குழுக்களாக பிரித்து அங்குள்ள தாவரங்களைப் பற்றி குறிப்பு எடுக்க சொன்னார்கள் ஆசிரியைகள். ஸ்மிதா, ஆர்த்தி, சந்தியா, கோகிலா, மித்ரா இவர்கள் அனைவரும் ஒரு குழு.

பாதுகாப்பிற்காக எண்களும் குறிக்கப்பட்டன. அவர்கள் செய்தது யாருக்கு பயனோ இல்லையோ ஹரிஷுக்கு நல்ல பயன் அளித்தது.

அதிலிருந்து திருட்டுத்தனமாக அவளின் எண்களை எடுத்துக்கொண்டான். சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்த ஹரிஷ் ஐ அவன் அறியாமலே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்மிதா.

சரி அவ சைட் அடிக்கட்டும் அதுக்குள்ள ஹரிஷ பத்தி பாத்துடலாம்.

இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு வருடம் IT இல் வேலை பார்த்து அதில் பிடித்தம் இல்லாமல் போக தாவரங்களின் மேல் எழுந்த ஈர்ப்பால் அதனை முறையாக கற்று ஆராய்ச்சி செய்கிறான்.

மிகுந்த நுணுக்கமான அறிவு கொண்டவன். வெளித்தோற்றத்தில் புலப்படாது. எப்போதும் துருதுருவென தோன்றுவான். ரெக்கை இல்லாத 24 வயது பறவை.

இதுவரை எதற்காகவும் வருந்தியதில்லை. யாருக்கேனும் சிறு துன்பம் என்றாலும் போதும் இவனிடம் பேசினால் மறைந்துவிடும்.

தந்தையோ தமிழ்நாட்டின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவர். கோடிகளில் புரளும் நிலை. ஆனால் அவன் அதை எப்போதும் பெரிதாக கருதியதில்லை. வெளிக்காட்டிக் கொள்வதுமில்லை.

அம்மாவை அப்படியே உரித்து வைத்திருப்பவன். தந்தையும் தாயும் காதல் திருமணம் என்பதால் வீடு எப்போதும் கலகலவென்று இருக்கும்.

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora