மானிடர் வேற்றுமையில்லை

93 25 69
                                    

கதிரவனை மறைத்த கருமேகம் மாரியை பொழிய காத்திருக்கும்  காலைப் பொழுது அது.

" இந்த மாதிரி ஒரு கேஸை நான் வக்கீல் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை சூர்யா சார்...இதற்கெல்லாமா கேஸ் போடுவாங்க" என நாட்டில் நடக்கும் குற்றங்களை எல்லாம் விட்டு விட்டு ஏதோ ஒரு பெண் கொடுத்த கேஸை கிண்டலித்து சிரித்துக் கொண்டிருந்தார் நாராயணன்.

"அந்த பெண் ஒரு பைத்தியம் சார். நல்ல வேளை பொதுநல வக்கில் எனக் கூறி என்னை மாட்டி விட்டிருப்பாங்க.
நான் அந்த பையனுக்கு ஆஜராகுறேனு சொல்லி தப்பிச்சுட்டேன் " என்றவரோ 35 வயது மதிக்கத்த கருமை நிற கண்ணனின் நிறத்தில் தோல்வி என்ற ஒன்றையே தன் வாழ்வில் கண்டிராத துடிப்புமிக்க வக்கீல்.

" அந்த பைத்தியத்துக்கு எப்படியும் யாரும் வாதாட வரப் போறது இல்லை.
வாங்க சூர்யா சார் என்ன நடக்குதுனு பார்க்கலாம் நமக்கு நல்ல ஒரு நகைச்சுவைப் படம் காத்திருக்கு " என்றவனுக்கோ ஏகபோக சந்தோஷம்.

நீதிமன்றமே அமைதியாக காட்சியளிக்க அவர்கள் இருவரும் பைத்தியம் என்று கூறியவளோ பொலிவிழந்த முகமாக காணப்பட்டாள்.

காந்த கயல் விழிகள் இன்று அவளவனை ஈர்க்காமல் தரையை பார்த்துக் கொண்டிருக்க , மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறத்தில் இருந்தவளோ நான் ஏன் இப்படி பிறந்தேன் என மனதால் வெம்பிக் கொண்டிருந்தாள்.

பொறுமை, அடக்கம், அமைதி, உதவும் மனப்பான்மை என பல நற்குணங்கள் இருந்தாலும் அவை  எதையும் போற்றாமல் அவளின் நிறத்தை வைத்து  தூற்றும் உலகத்தில் பிறந்தது அவள் தவறல்லவே.

கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருக்க துடைக்க கூட திராணி இல்லாமல் நிலத்தையே வெறித்துக் கொண்டிருந்தவள் சட்டென தலையை நிமிர்த்தினாள்.

அவன் தான் அவனே தான்.
தன் ஒட்டுமொத்த காதலையும்
தகுதியே இல்லாத ஒருவனிடம் காட்டினால் எப்படி அந்த காதல் வெற்றி பெறும்.
அவனைப் பார்க்கும் அவள் கண்கள் கூட அவனின் மீதான அதீத காதலை  பிரதிபலித்து அவளுக்குத் துரோகம் செய்தது.

மானிடர் வேற்றுமையில்லைWhere stories live. Discover now