ஜெகனிடம் பேசி முடித்த ஹரிஷ் அவன் அலைபேசியை அணைத்து விட்டு அங்கே இருந்தவர்களை பார்க்க அனைவரது முகமும் ஒவ்வொரு உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தது..
அனைவரது மௌனத்தையும் முதலில் கலைத்தது அங்கே நின்றுகொண்டு இருந்த சக்திதான். " பாத்தீங்களா இன்னமும் அவன் மாறவே இல்ல .. இன்னும் அதே கோபத்தோடு தான் இருக்கான் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம.. என்னோட பிறந்த நாள் அன்னைக்கு எதுக்கு அந்த வீணாப்போனவன் கிட்ட பேச சொன்னீங்க??"
சக்தி எதுக்கு இப்போ இப்படி கத்துற?? அவன சொல்றியே நீ மட்டும் அவன் இடத்தில இருந்து யோசிச்சு பார்த்தியா??
என்னை என்ன யோசிக்க சொல்ற அர்ஜுன்? அவன் மேல தான் தப்பு இது எல்லாருக்கும் தெரியும் .. நான் தப்பு பண்ண மாதிரி யோசிக்க சொல்றே..
தப்பு பண்ணுனா தான் யோசிக்கணும் இல்ல சக்தி .. நமக்கு முக்கியமானவங்க தப்பு பண்ணும் போதும் நம்ம அவங்க பக்கம் இருக்கிற சூழ்நிலையை யோசிச்சு பார்த்து புரிஞ்சுக்கணும்.. அதுதான் எந்த உறவுக்கும் அழகு . அவன் நம்மளோட பிரென்ட்டுடா எப்படி உனக்கு அவனை தப்பா நினைக்க தோணுது??
ஓ அப்போ மித்ரா யாரு?? அவன் மட்டும் மித்ராவை தப்பா புரிஞ்சுகிட்ட இன்னும் பைத்தியம் மாதிரி பேசிட்டு சுத்திட்டு இருக்கான்.. ஏதோ அந்த சூழ்நிலையில புரியல விடு.. ஆனா அது நடந்து எத்தனை வருஷம் ஆச்சு.. ஒரு நாள் ஒரு மணி நேரம் பொறுமையா உட்கார்ந்து யோசிச்சு பார்த்து இருந்தா இந்நேரம் அவனுக்கே தெரிஞ்சு இருக்கும்.. மித்ரா மேல மட்டும் அத்தனை தப்பும் இல்லன்னு..
அவன் அதை கூட செய்யல...
"அண்ணா... ப்ளீஸ்.. நடந்ததை மறந்துடுங்க.. " என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மித்ரா பேச..
"உன்னால அத்தனையும் மறந்துட்டு நார்மல்லா வாழ முடியுமா மித்ரா?? " என்று சக்தி அவளை எதிர் கேள்வி கேட்க..
அவளிடம் கசந்த முறுவல் மட்டுமே பதிலாய்..