அன்றைய நாள் இரவில் தன் செல்பேசிக்கு அழைப்பு வர ஸ்மிதா யார் என்று பார்த்தாள். அது தெரியாத எண்ணாக இருக்க அவள் ஏற்கவில்லை.
பின்னர் , அழைத்துக் கொண்டே இருந்ததால் ஆர்த்தி அழைப்பை ஏற்றாள்.
" ஹலோ ..யார் வேணும் " என்ற குறளில் மிரண்டு பின் யூகித்து ,
" வாண்டு. நான் Harish பேசுறேன் " என்று சொல்ல ,
" ஓ Harish நீங்க எப்படி.... இந்த noல " என்றாள்.
" அது ஒரு சின்ன clarification அவ work ல அதான் clear பண்ணிக்கலாம்னு" என்றான் சமாளித்து.
அவளோ திரும்பி மணியை பார்க்க 10.30 ஆகியிருந்தது.
" இல்லையே logic இடிக்குதே. இந்த நேரத்துல கேக்குற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான doubt உ? அவ்வளவு முக்கியமானதா இருந்தா அதை காலையில கேட்கலாமே. இல்லாட்டி lecture முடிஞ்சப்புறம் கேட்கலாமே. இப்பவே கேட்கணும்னா புரியலையே" என்றாள்.
" அம்மா தாயே ! Phone அ சுமி கிட்ட குடு please " என கெஞ்சும் தொனியில் கேட்டான்.
" சுமியா.... இது எப்போ இருந்து. இந்த story எனக்குத் தெரியாம எப்டி develop ஆச்சு. அக்கறையா போய் எழுத சொல்லும்போதே doubt இருந்தது.
ஆனா, இப்போதான் confirm ஆகுது " என்றாள்." அப்பப்பா அத அப்புறம் சொல்றேன். சும்மாவே உன் friend scene போடுவா. இதுல நீ வேற ஏதாச்சும் சொல்லி கெடுத்துறாத "
" சரி சரி இவ்ளோ கெஞ்சுறதால தரேன் " என்றவள் ஸ்மிதாவிடம்,
" சுமி...Harish உன்கிட்ட பேசணுமாம் ஏதோ project விஷயமா " என 'project ' இல் சற்று அழுத்தத்தோடு சிரித்தபடியே கொடுத்தாள்.
அதை வாங்கியவள் குழப்பத்தோடு,
" சொல்லு Hari.. என்னாச்சு எல்லாம் correct ஆ தான பண்ணிருந்தேன் " என்றாள்.
ஆர்த்தியோ மனதில், " சொல்லு Hari யா... அடப்பாவிங்களா பக்கத்திலேயே இருந்த எனக்கே bulb உ கொடுத்துட்டாங்களே எப்படியோ நல்லா இருந்தா சரி " என நினைத்தவாறே உறங்கச் சென்றாள்.
ஹரியோ அவள் பதட்டத்தை எண்ணி சிரித்தபடியே,
" project ல தான். நான் இன்னிக்கி என்ன Colour shirt போட்டிருந்தேன். சொல்லு பாப்போம் " என்றான்.
YOU ARE READING
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomanceHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...