மன்மதன்

94 9 5
                                    

சுமித்ரா : குட் மோனிங் சார்..

அஷ்வின் : சுமித்ரா.. ஆ.. குட் மோனிங்.. நா உங்கள மீட் பண்ணனும்ன்னு இருந்தேன்..

சுமித்ரா : சார்.. திஸ் ஈஸ் ம ரெஸிக்னேஷன் லெட்டர்..

 திஸ் ஈஸ் ம ரெஸிக்னேஷன் லெட்டர்

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.

அஷ்வின் : வட்..?? திடீர்னு..

சுமித்ரா : ப்பார்ஸ்னல் ரீஸன்க்காக சார்..

அஷ்வின் : நய்ட் நடந்த விடயங்கள் தான் இந்த முடிவுக்கு காரணம்ன்னு சொன்னா.. அம் ரியலி ஸொரி..

சுமித்ரா : நீங்க எதுக்கு சார் சொரி சொல்ரீங்க.. ஐ ஏம் ரியலி சொரி சார்.. நா ஒரு நல்ல நண்பனுக்காக என் உழைப்ப கொடுக்கலாம்ன்னு வந்தேன்.. பட் இங்க எல்லாமே வேற மாதிரி இருக்கு.. தயவு செய்து என் பேபார்ஸ பார்த்து ஸய்ன் பண்ணி தாங்க..

அஷ்வின் : ஒரு நிமிஷம்.., கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்க... எங்க மேல தான் பிழை இருக்கு.. அதற்காக உங்க ஜொப்ப விட வேண்டிய அவசியம் இல்லையே..!!

சுமித்ரா : தேன்க் யூ சார்.. ஐம் லீவிங்..
சுமித்ரா அங்கிருந்து புறப்பட்டு சென்றாள். அவளது விக்ரம் மீதான காதலை மதித்ததனாலேயே சுமித்ரா அஷ்வினை ஓர் நண்பனாக ஏற்று நடந்தாள். ஆனால் அஷ்வின் தன்னை காதலித்ததனால் அங்கு இருந்த நட்பு உடைந்து போனதென எண்ணியே அவள் தனது ராஜினாமாக்கடிதத்தை அஷ்வினிடம் கொடுத்தாள். எவ்வளவு தடுத்தும் அவள் மறுத்துவிட்டாள். சிவா, ஆதி, அபி மட்டுமின்றி சுமித்ராவின் பெற்றோரும் எவ்வளவு எடுத்துக் கூறிய போதும் அவள் யார் கருத்திற்கும் செவிசாய்க்கவில்லை. மீனாவின் வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது.
சுமித்ரா தனது பல்கலை கழகத்திற்கு அருகில் உள்ள விடுதியுடன் கூடிய ஒரு சிறுவர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக தொழில் புரிய ஆரம்பித்தாள். பாடசாலை விட்டதும் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆலமரத்தடியில் சாய்ந்திருப்பாள். அன்று காலை பள்ளிக்கூடத்தில் நடந்த சந்தோஷமான விடயங்களை விக்ரமிடம் கூறுவதாக எண்ணிக் கொண்டு சிரித்து கதைப்பாள். பின் விடுதியிற்கு சென்று விடுவாள். இப்படியே ஒரு மாதம் கடந்து விட்டது.
பனிப்போர்வையை பகைவர் பற்றியெறிப்பதற்காக போரெடுத்து வருவதை போல் சூரியனும் வரவானது. சுமித்ராவும் வழமை போன்று பள்ளிக்கூடத்திற்கு சென்று தரம் இரண்டு மாணவர்களுக்கு மழலை மொழியால் மழை பற்றி பாடம் நடாத்திக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் வகுப்பு வாயிலில் ஓர் ஆடவன் இருமும் சத்தம் கேட்டது. அனைவரது கவனமும் அங்கு திரும்பியது. அந்த ஆடவன் வேறு யாரும் இல்லை, அஷ்வின்.

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Tempat cerita menjadi hidup. Temukan sekarang