❣️நம்ம வாழ்க்கைல யாரும் எதார்த்தமா வர மாட்டாங்க. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.❣️
ஓகே இப்போ சம்பவத்துக்கு போவோம்
ஒரு 4 இல்ல 5 வருஷத்துக்கு முன்னாடி. அண்ணைக்கு 10 வது லீவ் எல்லாம் முடிஞ்சு ஸ்கூல் மறுபடியும் ஓபன். காமெடியா ரெட்டை சடை போட்டு அதுவும் நல்லா சோடா புட்டி. ஒரே ஒரு பொட்டு.ஒரு பொட்டுக்கம்மல் வாட்ச் இதெல்லாம் போட்டு பக்கா பழம் என்று சொல்லும் படியாக நான் ஸ்கூல்க்கு என்னோட பிரண்ட்ஸ் கூட நடந்து போய்ட்டு இருந்தேன்(எங்க ஸ்கூல் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் பா வளையல் எல்லாம் போடவே கூடாது ரெண்டு பொட்டு வைக்க கூடாது இப்படி நிறைய ரூல்ஸ் உண்டு ). ஒரு வழியா ஸ்கூல்க்கு போயாச்சு. என்னோட அதே ஸ்கூல் அதே பிரண்ட்ஸ் இருந்ததால எனக்கு பெரிய வித்தியாசம் தெரியல ஆனா புதுசா நிறைய பேர் வந்துருந்தாங்க. என்னோட கிளாஸ்ல நிறைய பசங்க வந்துருந்தாங்க. கம்ப்யூட்டர் பசங்க ஒரு பக்கம் இருந்தோம். பயாலஜி பசங்க ஒரு பக்கம் இருந்தோம்(me:பசங்கன்னு நான் பையன பத்தி சொல்லல எல்லாரும் பொண்ணுங்க தான் ). அப்போ ஒரு பொண்ண பாத்த ரொம்ப சைலன்ட்டா இருந்தா அந்த பெஞ்ச்ல இருந்த எல்லாரும் ஒரே ஸ்கூல்ல இருந்து வந்துருந்தாங்க போல.ஆனா அவ மட்டும் ரொம்ப வித்யாசமா தெரிஞ்சா. நான் கண்டுக்கல க்ளாஸ் ஸ்டார்ட் ஆச்சு
அப்போ என்னஆச்சு என்னோட கிளாஸ்க்கு என்ன லீடரா போட்டாங்க. படிப்ஸ் அப்டிங்கறதுக்காக இல்ல வேலை செய்ய வேற யாரும் வரல(me:நான் தான் இளிச்சவாய் 🤪)அப்போ கிளாஸ் கிளீனிங் இருக்கும் யாருயாரு கிளீன் பண்ணணும்ன்னு சொல்லணும் புதுசா பசங்க வேற வந்ததால நான் டூட்டி உள்ள 5பேர்கிட்ட சொல்ல போன எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டு இப்போதான் ரம்யா கிட்ட பேச போறேன் இவங்க தான் இந்த சேப்டர்க்கு கதாநாயகி . நான் போய் இங்க பாருங்க நீங்க இன்னைக்கு கிளீனிங் டூட்டில இருக்கீங்கன்னு சொன்ன. அறிமுகம் இல்லாதவங்கன்னு மரியாதையா வாங்க போங்கன்னு சொன்ன. அவ என்ன பார்த்துட்டு சரின்னு கூட சொல்லல திரும்பிட்டா.நீங்களே சொல்லுங்க கோபம் வருமா வராதா எனக்கு வேற ஸ்கூல் டைம்ல ரொம்ப கோபம் வருமா நான் போய் என்னோட பிரண்ட் ஹரிணி சத்யவதி ரெண்டு பேர்க்கிட்டயும் சொன்ன இந்த மாதிரி எனக்கு அந்த ரம்யா பொண்ண பிடிக்கல அவ கொஞ்சம் சீன் போடுறா அப்படின்னு. இப்படித்தான் எங்களோட முதல் சந்திப்பு இருந்துச்சு. அப்புறம் அவதான் அவளோட ஸ்கூல்ல ஸ்கூல் பர்ஸ்ட் இதுனாலதான் சீன் போடுறான்னு கூட நினைச்சே🤪🤐🤐.அப்புறம் என்னோட பிரண்ட் பாரதி கூட அவளும் உக்காருவா பேச ஆரம்பிச்ச பிறகுதான் தெரிஞ்சது அவன் என்கிட்ட மட்டும் இல்லை யாருகிட்டயும் அவ்வளவா பேச மாட்டான்னு. ரொம்ப ரொம்ப ரொம்ப சைலன்ட். எப்படின்னா நான் நார்மலா பேசுனாலே சத்தமா இருக்கும். அவ சத்தமா பேசுனாலே நார்மல் சத்தத்த விட கம்மியா இருக்கும். உதாரணம் அவ என்ன லாஸ்ட் பெஞ்ச் பசங்க கூப்பிட்டா கூட கேக்குற காது இவ கூப்பிட்டா கேக்கவே கேக்காது. நான் தெரிஞ்சவங்க கிட்ட நல்லா பேசுவேன் ரத்தம் வர்ற அளவுக்கு பேசுவேன் அவ அளவா பேசுவா. நல்லா படிப்பா அப்புறம் சாப்பாடு அவங்க வீட்ல சாப்பாடு செம்மயா இருக்கும் அவளுக்கு எங்க வீட்ல பண்ற கூட்டு ரொம்ப பிடிக்கும்
மேல இப்படி கொஞ்சம் நாள் போச்சு. என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு அப்போ நான் ஒருத்தங்கள பத்தி தப்பா நினைச்சு அது பொய்ன்னு ஆச்சுன்னா நான் அவங்க கிட்ட போய் சாரி சொல்லிடுவேன் இல்லன்னா மனசாட்சி பிராண்டும் . ஒரு நாள் அவகிட்ட கூட சாரி சொன்ன இந்த மாதிரி உன்ன சீன் போடுற பொண்ணுன்னு நினைச்சேன் அதான் சாரி ஆனா நீ இப்படி டம்மி பாபாவ இருப்பேன்னு எதிர்பாக்கலன்னு அவ கேட்டு சிரிச்சுட்டா. அப்புறம் என்ன நாள் எல்லாம் நல்லாதான் போச்சு நிறைய புயல் வந்துச்சு லீவு கிடைச்சுச்சு அப்டியே 12 வது வந்துச்சு.
YOU ARE READING
டைரி
Randomஇது என்னோட வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள எழுத போறேன். இது கதை இல்ல நிஜம்