மூவர்

170 10 8
                                    

சுமித்ராவின் கார் பல்கலைக்கழகத்திற்கு முன் நிருத்தப்பட்டது. ஆனால் அவள் இறங்காது ஓட்டும் பிடியை இரு கைகளாளும் இருகப்பிடித்துக் கொண்டு அஷ்வின் கூறிய சந்தர்ப்பங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்தினாள். அவளது அடக்கி வைத்திருந்த கண்ணீரும் கவலையும் உரத்த குரலாக வெளிவந்தது.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்தி அழுதாள். பல நிமிடங்கள் அவ்வாறே கழிந்தது.
பின் தன் காரை விட்டு இறங்கி மனசுமை பாதங்களுக்கு இறங்க அதைச் சுமந்தவளாக ஆலமரத்தடிக்குச் சென்றாள். ஏதும் பேசவோ அழவோ செய்யாது, அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தாள். சில நிமிடங்களுக்கு பின்பு, சுமித்ராவின் கண்ணங்களை வருடியபடி குளிர்ந்த மாருதம் வந்து சென்றது. சுமித்ராவும் இளம் புன்னகையுடன் இமைகளை மூடி அக் குளிரை உணர்ந்தாள். திடீரென அம்மாருதம் சுமித்ராவின் வலதுபுறமாக தடைப்பட்டு நின்றது. சுமித்ரா தனது புன்னகையை நிருத்தி விட்டு கண்களை திறக்காமல்,

சுமித்ரா : உன்கிட்ட சண்ட போடனும்னு தான் வந்தேன்.. நீ தான் அஷ்வின என் லய்ப்ல சேர்த்து விட்டன்னு எனக்கு தெரியும்.. பட்..

விக்ரம் : பட்... !!?
மீண்டும் சுமித்ரா கைகளுக்குள் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தாள். விக்ரம் அவளை பார்த்து சிரித்தபடி, " இன்னும் இந்த அழுமூஞ்சு மாறவேயில்ல.. சுமித்ரா.. அழுகுரத நிறுத்து.. இல்லன்னா நா போயிடுவேன்.." என்று கூறியதும் சுமித்ரா முகத்தில் இருந்து கைகளை விலக்கி, கண்ணீரைத் துடைத்தவாறு " போ.. நா எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ போ .. " என அமைதியான குரலில் கூறினாள்.

விக்ரம் : போவேன்..

சுமித்ரா : ஹா போ..
என்றதும் சரியென்று கூறி விக்ரம் மறைந்து சென்றான். சிறிது நேரத்தில் சுமித்ரா, அமைதியான குரலில் விக்ரம்... இங்க வா.. என்றாள். விக்ரம் அங்கு வரவில்லை. மீண்டும் சற்று குரலை உயர்த்தி அழைத்தாள். வரவில்லை.. உரத்த குரலில் அழைத்ததும் , ஸ்.. கத்தாத.. ஓ பக்கத்ல தா இருக்கேன்.. என்று கூறியபடி அவள் அருகில் மீண்டும் தோன்றினான்.

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora