"ஏய் ஆதி எங்கடி? .... அவன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்கான்? " என்று கௌதம் பிரியாவிடம் கத்திகொண்டிருக்க ....
"என்கிட்ட எதுக்கு கேக்கறீங்க? எதுவா இருந்தாலும் அவன் கிட்ட பேசிக்கோங்க, அவன் உங்க பையன் தானே? அவனும் நான் சொல்றதை கேக்க மாட்டிங்கறான், நீங்களும் நான் சொல்றதை கேக்கமாட்டிக்கிறீங்க" என்று பிரியா பொறிந்து தள்ளவும்
"அவன் எங்கன்னு சொல்லுடி? , நானே கேட்டுக்கறேன்" என்றான் கோவமாக கெளதம்
"எனக்கு தெரியாது சித்து.. உங்களோட கோவம் தேவை இல்லாதது" என்றவள் அவனிடம் முகம் திரும்பிக்கொண்டு சென்று விட்டாள்
"இவ ஒருத்தி, அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கா, பெரிய அம்மா, பையன் பாசம் , இதுங்க 2உம் பண்ற அலப்பறையை பார்க்க முடியல, அவனை ஒரு சொல் சொல்லக்கூடாது வரிஞ்சிக்கடிக்கிட்டு வந்தரா" என்றவன்
"அவன் மட்டும் சும்மாவா சரியான அழுத்தக்காரன், எதையும் சொல்ல மாட்டிங்கறான்.... கல்லுளிமங்கன் மாதிரியே இருக்கான், அவன் வாயில இருந்து ஒரு வார்த்தை வாங்கமுடியுதா? எதா இருந்தாலும் அம்மா முந்தானையை பிடிச்சிட்டு அவகிட்ட மட்டும் சொல்றான்" என்று கௌதம் குறைபட்டு கொள்ள.... அவன் மனதோ " டேய் நீ மட்டும் என்னடா? பிள்ளை வரவரைக்கும் உன் பொண்டாட்டியை முந்தானையை பிடிச்சி சுத்தி சுத்தி வந்தவன்தானே என்றது மனசாட்சி "....
"அவங்க ரெண்டும் பேரும் அம்மா பையன் பாசம்னா, நீயும் ஒன்னோட பொண்ணும் செய்யற அலப்பறையை எங்க போய் சொல்றது? என்று நினைத்துக்கொண்டவன்...., " இப்போ எங்க போனான் அவன்? , ஏண்டி ஒருத்தன் இங்க காட்டு கத்து காத்திட்டு இருக்கேன், எதாவது கண்டுக்கறியா? எங்கடி உன் பிள்ளை?" என்று மீண்டும் கத்தினான்
"என்ன கௌதம் பையன் ரொம்ப அலைய விடறானா?" என்று பிரபாகரன் கேக்கவும்
"உங்களுக்கு என்னப்பா சமத்தா ஒரே ஒரு பையனை பெத்துட்டு இப்போ ஜாலியா இருக்கீங்க... நான் அப்படியா??" என்றான்
YOU ARE READING
வரமாக வந்த வேந்தனவன் (வரமாக வந்தவளோ பாகம் 2)
Romanceபடிச்சி பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க