தி க்ரிமினல் கேஸ்
கதை முன்னோட்டம்.
அட்வகேட் எனும் முத்திரை பதித்த சிவப்பு நிற ஹோண்டாய் கார் முழு வேகத்துடன் வந்து சடாலென்று ஒரு இடத்தில் நின்றது. காரின் கதவை படாலென்று திறந்து ஒரு 40 வயது பெண் வெளிப்பட்டாள். படபடவென்று தனது வீர நடையை தன் அலுவலகத்தை நோக்கி செலுத்தினாள்.
அலுவலகத்தில் உள்ளே மூன்று நபர்கள் இருந்தனர் அவர்களுக்கு வயது கிட்டதட்ட 25 இருக்கும்.
"செத்தோம் வைதேகி மேம் வந்துட்டாங்க" என்றாள் அந்த மூன்று பேரில் ஒரு பெண்.
"வைதேகி மேம்க்கு அஸிஸ்டென்ட்டா சேர்ந்த நாள்ல இருந்து எப்போதும் என்னோட பி.பி நார்மலா இருந்தது இல்ல..இன்னைக்கு நான் மயங்கி விழுந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.." என்றான் கணேஷ்.
"ஆமா..நாளைக்கு கடைசி ஹியரிங்க் கோர்ட்ல ஆனா யூஸ்ஃபுல்லா ஒண்ணுமே பண்ணல..சுஜி உனக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா டி?" என்று கேட்டாள் விஷாலிணி
"சுத்தமா இல்ல.." என்று சுஜி சொல்லும்போது கதவு படாலென்று திறந்துக் கொண்டு வைதேகி உள்ளே நுழைந்தாள்.
அவளைப் பார்த்த மூன்று பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து நின்றனர்.
தன் கையிலுள்ள ஹேண்ட் பேக்கை மேஜையில் வைத்துவிட்டு "இந்த கேஸ்ல எதாச்சும் ஏவிடேன்ஸ் கலெக்ட் பண்ணீங்களா?"
"மேம்...அது வந்து..."
"புரியுது..இந்த கேஸை உடனே நாம திசைத் திருப்பணும்..அப்போதான் இந்த கேஸ்ல நாம ஜெயிக்க முடியும்"
"அது எப்படி மேம்..? யார் மேலே இந்த கேஸை திசைத் திருப்பணும்?" என்று கேட்டான் கணேஷ்.
"இந்த கேஸை விசாரிச்ச இன்ஸ்பெக்டர் மேலே...அப்படி நாம பண்ணிட்டோம்னா எதிர் தரப்புல உள்ள எல்லா சாட்சிகளும் தவிடுபுடியாகிடும்.." என்று கூறிக் கொண்டே தன் நாற்காலியில் அமர்ந்தாள்.
"அந்த கேஸை விசாரிச்சது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆனா இப்போ அவரு உயிரோட இல்ல.." என்றாள் சுஜி..
"தெரியும் சுஜி..அதான் அவன் மேலே பழியை போட சொல்லுறேன்.. என்ன ஆனாலும் சரி..நான் இந்த கேஸ்ல ஜெயிச்சே ஆகணும் புரியுதா...?"
"எஸ் மேம்.." என்று மூன்று பேரும் ஒருசேர கூறி எழுந்தனர்.
**********************
கையில் இருந்து அதிர்ந்த தன் போனை எடுத்து காதிற்கு கொடுத்தான் கனகவேல். மறுமுனையில் டி.ஜி.பி
"எஸ் சார்.."
"..."
"ஆமா சார்..நான் க்ரைம் ஸ்பாட்ல தான் இருக்கேன்..சீக்கிரம் குற்றவாளியை கண்டு பிடிச்சிடுவேன் நீங்க எப்போதும் போல என்னை நம்பலாம்.."
போனை அணைத்து விட்டு கனகவேல் கீழே பார்த்தான்.
எறிந்த நிலையில் ஓர் உடல் கிடந்தது.
ச.தங்கநாதேஸ்வரன்
எனது கதையை வாசித்து ஆதரவு அளித்ததற்கு நன்றி..இது எனது அடுத்த படைப்பு.. charithaas தளத்தில் அத்தியாயம் 1 பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் அனைவரும் அங்கே படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அங்கே கதை நிறைவடைந்ததும் இங்கே பதியவுள்ளேன்.
https://wp.me/pbMwDy-121
YOU ARE READING
The Criminal Case (தி க்ரிமினல் கேஸ்)
Mystery / Thrillerபுதிய க்ரைம் தொடர் charithaas தளத்தில்