அருகே வரும் பிரிவை எண்ணி சிறு கலக்கத்தோடு ஸ்மிதா அமர்ந்திருந்தாள்.
அதை கண்ட அதில் ஆருயிர் தோழியோ ,
" ஏய் என்ன 1000 வாட்ஸ் பல்பாட்டம் மின்னிட்டிருந்த இப்ப என்னடான்னா திடீர்னு என்னமோ போல விட்டத்தை பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்க" என்று அவளை உற்சாக படுத்தும் பொருட்டு கேட்டாள்.
அதற்கு ஸ்மிதாவோ,
" இல்லடி நாளைக்கு திரும்ப ஊருக்கு போறோம். இந்த tour அ என்னவோ பயங்கரமா miss பண்ண போறேன்ற மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்றதும் ,
மெல்லிய புன்னகையோடு ஆர்த்தி ,
" அது சரி டூர் பத்தி சொன்னதுல இருந்து நான்தான் உன்ன தொனத்தி இழுக்காத குறையா கூட்டிட்டு வந்தேன். அப்போ என்னல்லாம் பேசுன ஞாபகம் இருக்கா?
அம்மா அப்பாவ விட்டுட்டு எப்படி ஒரு வாரம் னு ஏதோ புகுந்த வீட்டுக்கு போற புது பொண்ணாட்டம் சீன் போட்டுட்டு இப்ப என்னடான்னா வேற விதமா பேசுற.😂😂
எனக்கு என்னவோ நீ மிஸ் பண்றேன்னு சொன்னது டூர இல்ல ஒரு ஆறடி ஹீரோவனு தோணுது" என்று கிண்டல் செய்தாள்.அவள் சொற்களில் இருந்த உண்மை மனதை ஏதோ செய்ய சிறு சமாளிப்புடன் ," ஹே ஹரிஷ பத்தி அப்டிலாம் தப்பா பேசாத. அவர் எனக்கு ஒரு நல்ல friend and guide மாதிரி" என்று கூற அந்த நேரம் அங்கு கால் பேசியவாறு வந்த ஹரிஷ் தன்பெயர் அடிபடுவதை கேட்டு மறைவில் நின்றான்.
ஆர்த்தியோ ஸ்மிதா தன் வாயாலேயே உண்மையை கூற வைக்கும் நோக்கத்தோடு,
" ஆமாமா... எங்களுக்கெல்லாம் ஹரிஷ் அப்படிதான். ஆனா ,உனக்கு அவர் எப்டின்றது தான் என் கேள்வி. ஏன் மறைக்கிற?
உனக்கு அவர பிடிக்கும். அவரைப் பத்தி சொல்லவே வேணாம்.
study tourனு வந்துட்டு இங்க நீங்க ரெண்டு பேரும் பாடுற டூயட் எனக்கு தெரியாதா ?" என்று கேட்க ஹரிஷ் முகத்தில் புன்னகை பூக்க ஸ்மிதா விற்கோ திக்கென்று ஆனது." ஆர்த்தி வேணாம். தயவுசெஞ்சு இதுக்கு மேல எதுவும் பேசிடாத. அவர... நான் அப்படியெல்லாம் பாக்கல.. அவரும் என்கிட்ட சகஜமா ஒரு நல்ல...... நட்போடு தான் பழகினார். அதுமட்டுமில்லாம என் வீட்டில் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருக்காங்க. எனக்கு அவங்க தான் எல்லாம்" என்று வீராப்பாக கூறினாலும் அவள் மனதோ அவளுக்கு எதிராய் வாதாடியது,
'ஓஹோ அப்போ நீ அவர நட்போட மட்டும்தான் பாக்குறியா?' என்று கேள்வியில் புருவம் சுருக்கினாள்.
அவள் வேதனையை உணர்ந்த ஆர்த்தி மேலும் வறுத்த வேண்டாம் என எண்ணி,
" ஹே நான் எதோ விளையாட்டுக்கு சொன்னேன். நீ அத நெனச்சு Feel லாம் செய்யாத. வா வா.. சீக்கிரம் போனா தான் சூடா coffee கிடைக்கும் " என்று அழைத்துச் சென்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹரிஷின் இதயம் முழுக்க வலி கொண்டது.
' சுமி..அப்போ நான் உனக்கு அவ்வளவுதானா?' என்ற கேள்வி மனதை ரணமாக்கியது.
பின்னர் முகம் கடுமையாக,
' இல்ல இதுக்கு நாளைக்கே ஒரு முடிவு கட்டுறேன்' என்று திண்ணமாய் அவ்விடம் விட்டு சென்றான்.
தூங்குபவரை எழுப்பிட முடியும்.... தூங்குவது போல் நடிப்பவர்களை முடியுமா?..😥
_______________________________________
VOCÊ ESTÁ LENDO
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomanceHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...