இயற்கை குறித்தும் அப்பகுதியில் இயற்கை பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு உள்ள விழிப்புணர்ச்சி பற்றி அறிய இறுதிநாளில் அது சார்ந்த கணக்கெடுப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அன்றோடு அனைவரும் ஊருக்கு திரும்புவதாய் இருந்ததால் எல்லா பொருட்களையும் துரிதமாகவும் கவனத்துடனும் தத்தமது பெட்டிகளில் எடுத்து வைத்த வண்ணம் இருந்தனர்.
ஸ்மிதாவோ , எதிலும் கவனம் செலுத்த இயலாது பல சிந்தனைகளில் உழன்ற படியே தனது உடமைகளை பார்த்திருந்தாள். பின்னர் , ஏதோ நினைத்தவளாய் அனைத்தையும் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அந்த Hotel இன் பின் உள்ள Garden Area விற்கு சென்றாள்.
வெளிநாட்டு வகை செடிகளும் பல வண்ண பூக்களும் 2 பனை மரங்களும் இருந்தன. தினசரி பராமரிப்பினால் சற்று செழுமையாக காட்சியளித்தன. அதன் நடுவில் சில இருக்கைகளும் அமைத்திருந்தனர். கால் போன போக்கிலே சென்று ஒன்றில் அமர்ந்தாள்.
அங்கு சுற்றித் திரிந்த கீச்சிடும் குருவிகளின் அழகில் தன்னைத் தொலைத்தவள்,
' இது மாதிரி தான நம்ம மனசும் இருந்தது. ஆனா , இப்போ ஏதோ அடைப்பட்டு வச்ச மாறி ஒரு நபரையே சுத்திட்டு இருக்கு. ஒரு வாரம் சட்டுனு ஓடிடுச்சு. ஆனா அதுக்குள்ள ஏதோ புதுசா ஒரு வாழ்க்கையே வாழ start பண்ணிட்டாப்ல cinematic ஆ இருக்கு. அவ்ளோ ஒரு weak state லையா நான் இருக்கேன்? என் மனசு என்னதான் சொல்ல வருது? 'என்ற குழப்பத்தோடு கண் மூடினாள்.
மூடிய விழிகளில் குறுநகையோடு இவள் பக்கம் திரும்பிய ஹரிஷின் முகம் தெரிந்தது. அவளை அறியாமலே அவள் இதழ்களிலும் புன்னகை பூத்தது. பின் புத்தகம் கொடுத்தபோது தீண்டிய அவன் விரல்கள் நினைவில் வர இதயம் படபடக்க விழிகளை திறந்தாள்.
கனவின் நாயகனோ தூரத்தில் கூரிய விழிகளோடும் நெற்றியில் சிறு சிந்தனை கோடுகளோடும் இவளை பார்த்தவாறு நின்றிருந்தான். பதற்றத்தோடு இருக்கையை விட்டு எழுந்தவளின் அருகே வந்தவன்,
"My god...சுமி.. நீ இங்கதான் இருக்கியா ! உன்ன எங்கெல்லாம் தேடுறது..ஒரு Mobile அ கைல எடுத்துக்கிறது அவ்வளவு கஷ்டமா உனக்கு " என்று சற்று கோபத்தோடு வார்த்தைகளை அடுக்க பேந்த பேந்த விழித்தாள் ஸ்மிதா. அவளது முகம் மாறுதலை கண்டவன் முகத்தில் தானாய் புன்னகை மலர்ந்தது.

DU LIEST GERADE
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomantikHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...