❤️ உறவாய் உணர்வாய் ❤️

7 0 0
                                    

Episode  1

        தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சாவூர் மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள  தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

        தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சாவூர் மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள  தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.

      காலை கதிரவன் மெல்ல ஆடி அசைந்து எழ , அதனை வரவேற்க பச்சை பாவாடை போர்த்திய அழகிய கன்னிகை அவனை நோக்கி கை நீட்டுவது போல் ஓர் அழகிய காலை பொழுது அங்கு ஒளி வீசியது....

தஞ்சாவூரில் கணபதியின் குடும்பம் புகழ் பெற்ற குடும்பம் ... அந்த ஊர் தனவந்தர் களில் ஒருவரான கணபதி குடும்பத்தை ஊர் மக்கள் மரியாதையுடன் நடத்துவர் .... அதற்கும் காரணம் உண்டு... ஊர் மக்களுக்கு கஷ்டம் என்ற போது உதவிக்கரம் நீட்டும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்... இல்லையென கேட்போருக்கு வாரி வழங்கும் வள்ளல்....

சில வருடங்களாக அந்த குடும்பத்தில் சிக்கல் காரணமாகவும் உடல் நலம் குன்றியதன் காரணமாகவும் கணபதி அதிகம் வீட்டை விட்டு வெளியே போவதில்லை...

கணபதியின் மனைவி ராஜம்மாள்... பெயருக்கு ஏற்றது போல் அதிகாரம் தூள் பறக்கும்... ஆனால் கணபதி பேச்சை மீறி நடப்பவள் அல்ல... பிள்ளைகளே தன் கண்கள் என வாழ்பவள்... அன்பானவர்.... இவர்களுக்கு 01 மகன் , 02 மகள்கள் என எளிமையான குடும்பம்...
மூத்தவன் சத்தியன்... குணத்தில் தங்கம்.. தந்தை சொல் தட்டாத பிள்ளை... தன் தந்தை இயலுமானவரை காத்து வந்த விவசாய தொழிலை இன்று திறன்பட செய்து வரும் வள்ளவன்... , மனைவி காயத்திரி ... அவனுக்கு ஏற்றது போல் குணம் கொண்ட சீதையவள்.... இவர்களுக்கு விக்ரம் , திவ்யா என இரண்டு குழந்தைகள்... ( அவர்களை பற்றிய அறிமுகத்தை பிறகு பார்க்கலாம் ..)

கணபதியின் இரண்டாம் செல்வம் ... அந்த வீட்டின் செல்ல மகள் மகா லட்சுமி... பெயருக்கு ஏற்றவள் போல் லட்சுமி கடாட்சமாக இருந்தாள்... அவரது அழகு குணத்திற்கு தகுந்தாற் போல் தேடி பிடித்து கல்யாணம் செய்து வைத்த மாப்பிள்ளை ராஜா .... அவர் குணத்திலும் ராஜா... சொந்தமாக தொழில் தொடங்கி , தன் முயற்சியால் முன்னேக்கு வந்த உழைபாளி... இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.... மூத்தவள் சந்தியா .... இரண்டாவது நிவி ... கடை குட்டி தருண்....

கணபதியின் மூன்றாவது வாரிசு... கமலி , சற்று கோபகாரி .... பிடிவாத குணம் கொண்டவள்.... ஆனால் அவளுக்கு வாய்ந்த கணவன் வாயில்லா பூச்சி சிவராமன்.... இவர்களுக்கு ஒரே வாரிசு கவிதா.....

இப்படி அடக்கமான சிறிய குடும்பம்... நமது கணபதி குடும்பம்.... ( என்ன யோசிக்குறீங்க... கதைல hero , heroine யாரு என்றா ??? கொஞ்சம் பொறுமையாக இருங்க... அடுத்த episode ல் கட்டாயமாக சொல்லுறேன்.... அடுத்த episode போட முதல் நீங்களே சொல்லுங்க ... யாரு hero , heroine ஆக இருப்பாங்க...🤔 )

இது என்னோட 03 வது கதை .... எனக்கு உங்களோட மொத்த ஆதரவையும் தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்... )

தொடரும்....

❤️ உறவாய் உணர்வாய் ❤️Where stories live. Discover now