விதியாடும் சதி ஆட்டம்....

673 44 0
                                    

நாட்கள் தன்னாலே விரைந்து சென்று  இரண்டு வாரங்கள் ஆனது. ஆனால் இருவரின் மன நிலையில் மாற்றம் சிறிதும் ஏற்படவில்லை.

ஸ்மிதா , இப்போது சிறு எதிர்பார்ப்போடு தன் எண்ணுக்கு வரும் அனைத்து புதிய அழைப்புகளையும் ஏற்றாள். ஆனால், எதிர்பார்த்திருந்தவனிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் ஏமாற்றத்தோடு காணப்பட்டாள். ஹரிஷோ , தன் துறை சார்ந்த எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய தொடங்கினான். இருப்பினும் அவன் மனதில் நிறைந்த ஏக்கங்களும் வலிகளும் நீங்கிய பாடில்லை.

இதே சமயத்தில் ஸ்மிதாவின் தாய்வழி சொந்தத்தில் ஒருவருக்கு திருமண ஏற்பாடு செய்து இருக்க அழைப்பு விடுத்தனர். மகளின் மன உளைச்சலின்  காரணம் புரியாததால் பெற்றோர் இருவரும் ஒரு மாறுதலுக்காக ஸ்மிதாவையும் தங்களோடு அழைத்துச் செல்ல எண்ணினர். அவளும் சரியென மனமுவந்து ஏற்றாள். அனைத்து சொந்தங்களும் குழுமி இருக்க ஸ்மிதாவின் கல்யாண பேச்சுகளும் இடம்பெற்றன. அவளது முக பாவங்களில் இருந்து விருப்பமின்மையை புரிந்து கொண்ட  தாய் சுதாவும் படிப்பை காரணம் சொல்லி தவிர்த்தார்.

திருமணம் அடுத்த நாள் காலை 5 மணிக்கு என்பதால் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். அந்த நிலையிலும் கூட தன் கைபேசியை பார்த்த வண்ணமே இருந்தாள் ஸ்மிதா. அவளின் அத்தை மகன் வினோத் இதனை கவனித்து கேலி செய்தான்.

" பாரேன்....இந்த கத்திரிக்காய... ஏதோ overnight ல trump call பண்ணப் போற மாதிரி வச்ச கண்ணு வாங்காம mobile அ பார்த்துட்டிருக்கா. முதல்ல போய் அங்க decorations க்கு help பண்ணு. நாங்க இங்க கல்யாண albums அப்புறம் videos க்கான arrangement check பண்ணிக்கிறோம் "

என்று அவளது கைப்பேசியை வாங்கி தன்னருகே வைத்துக்கொண்டு  அனுப்பி வைத்தான். மனம் இல்லாது சென்று மேடை அலங்காரத்தை சரி செய்ய உதவினாள்.

அதே நேரம் அங்கு ஹரிஷின் மன நிலையால் எந்த செயலிலும் ஈடுபாடு காட்ட முடியாது தவித்து இருந்தான். தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை நினைத்து தன் நிலையை ஒருவாறு புரிந்து கொண்டான். ஸ்மிதா விடம் ஒருமுறையேனும் பேசிவிட வேண்டும் என நினைத்த தன் இதயத்தை தடுக்க இயலாமல் போனான்.

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Where stories live. Discover now