தன்னவளைக் காணும் தவிப்பில் காத்திருந்தவனை மேலும் இம்சிக்காது வருகை புரிந்தாள் ஸ்மிதா. நீல நிற பூக்கள் நிறைந்த வெள்ளை சுடிதார் அணிந்து கூந்தலின் இரு பக்கமிருந்தும் சிறிதளவு எடுத்து clip இல் அடக்ககியிருந்தாள். மல்லிகை சரம் சூடி தென்றலின் தீண்டலில் தேவதையாய் வந்தவளை இமைக்கவும் மறந்து பார்த்திருந்தான். ரசனையின் பார்வையாலே வருடினான். மனதில் நிறைந்தவளை நேரில் மீண்டும் காண தான் வந்த காரணத்தையே ஒரு நிமிடம் மறந்தான்.
பின் தன்னிடமே,
"டே ஹரீஷ். சொதப்பாத. இப்படியே பேன்னு பார்த்துட்டு இருந்தா confirm அ உன்னால நீ நினச்சத செய்ய முடியாது. Come on. You can do it " என தேற்றி தன் கைபேசியில் இல்லாத நபரிடம் பேசுவதுபோல் கண்டுகொள்ளாமல் இருந்தான்.
ஏதோ சிந்தனையில் நடந்து வந்தவள் இதனை கவனிக்காமல் செல்ல, என்ன செய்வதென குழம்பி பின் சற்று சத்தமாக பேசினான்."ஹான்.. Yeah Yeah..reach ஆகிட்டேன்..exact location அனுப்பிடுங்க. I'll be there as soon as possible" என்றான் அவளை பார்த்தவாறே.
அந்த சத்தத்தில் அவளும் திரும்ப, நீல நிற சட்டை சாம்பல் நிற பேன்ட் என அசத்தலாய் நின்றவனை கண்டவளுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருசேர தோன்றியன. காண்பது எல்லாம் உண்மையா என அறியாது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.
'என் ஹரியே தான். ஆனா இங்க எப்படி? ஒருவேளை என்னை தேடி தானோ?'என்ற நினைவில் முகமெங்கும் புன்னகை பூக்க சுற்றத்தை மறந்து அவனது கை பிடித்தாள்.
"ஹரி..நீ.. இங்க.." என்று அதற்கு மேலும் வார்த்தை வராமல் விழிகளில் கலந்தாள்.
அவளது தொடுதலிலும் வார்த்தைகளிலும் தன்னைத் தொலைத்தவன் சிரமப்பட்டு முகத்தை உணர்வில்லாது வைத்துக் கொண்டான்.
அவளது பிடியை தன்னிடமிருந்து விடுத்து,
" Excuse me. யார் நீங்க? Have I met you before?" என்று கேட்டான்.அந்த ஒற்றைக் கேள்வியில் அவளது மகிழ்ச்சி அனைத்தும் சுக்கு நூறானது.
YOU ARE READING
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomanceHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...