"ஹலோ.. ஆர்த்தி சொல்லு" என்றாள் ஸ்மிதா குரலில் சுரத்தே இல்லாமல்.
அனைத்தும் தெரிந்த ஆர்த்தியும் எதுவும் தெரியாதவாறு,
"ஹே என்ன ஆச்சு? Dull ஆ பேசுற? எல்லாம் okay தானே?" என்று கேட்டதுதான் தாமதம் அழுகையினோடே அனைத்தையும் கூறி முடித்தாள்.
'பார்ரா ஹரிஷ்.. உங்கள சும்மா சொல்லக்கூடாது. வேற level acting தான். ஆனால் என் ஆருயிர் தோழிய இப்படி கொஞ்ச நேரத்துல devadas ஆக்கிட்டீங்களே. Too much' என்று நினைத்து மெலிதாக சிரித்தாள்.
பிறகு ஸ்மிதாவிடம்,
"அடக்கடவுளே. பயங்கர fraud ஆ இருப்பார் போலயே. நல்ல வேலை நீ தப்பிச்சுட்ட. லூசு மாதிரி அழாம நான் சொல்றத கேளு" என்றாள் கடுமையான பாவனையோடு.
"ம்ம்.. சொல்லு. ஆனா நீ நினைக்கிற மாதிரி அவர் fraud லாம் இல்ல. நான் தான் அவரு எதார்த்தமா பேசுனத என்னவோனு நினைச்சு.." என்று அழுகையினால் தேம்பினாள்.
அந்த தருணத்திலும் அவனை விட்டு கொடுக்க ஸ்மிதாவால் இயலவில்லை."என்னவோ இருந்துட்டு போது. முடிஞ்சத நினைச்சு அழுதுட்டே இருக்கிற life அ கெடுத்திடாதே. எதோ சொன்னியே ஹான். நாளைக்கு பொண்ணு பாக்க வர்றதா. அதுக்கு ஒழுங்கா ready ஆகு. பிடிக்குதோ பிடிக்கலையோ அது இப்ப பிரச்சினை இல்லை. ஆனால் உன்னை யாருன்னே தெரியாதுனு சொன்னா ஒருத்தருக்காக கிடச்ச இந்த chance அ use பண்ணிக்காம போயிடாத. அப்புறம் நீயே உன் life ஓட control அ இழக்கிற மாதிரி ஆகிடும். அந்த Aunty மனசும் தேவை இல்லாம கஷ்டப்படும்" என்றாள் ஹரிஷ் கூறியது போலவே.
அவர் கூறியதில் உண்மையை உணர்ந்தவள் சற்று சிந்தித்துப் பார்த்தாள். நிச்சயமாக ஹரிஷை மறந்து வேறு ஒருவரை ஏற்கும் துணிவு தற்போது இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டாள். இருப்பினும் அதற்காக தன்னிடம் பிரியமாக நடந்து கொள்ளும் ஒருவரின் மனதை காயப்படுத்தவும் மனம் வரவில்லை. எனவே நாளை பெண் பார்க்க வருபவரை தனியே சந்தித்து தன் மனதை தெளிவாக கூறிவிட எண்ணினாள்.
இவ்வாறான பல சிந்தனைகளில் உறக்கம் தொலைத்தாள். அடுத்த நாள் தோழி ஆர்த்தியும் வந்துவிட புரியாமல் அவளை பார்த்தாள். பின்னர், சுதா உதவிக்கு அழைத்து இருந்ததாய் கூறியதை ஏனோ ஸ்மிதாவின் மனம் ஏற்க தயங்கியது. நேரம் செல்ல செல்ல வெவ்வேறு புடவைகள், நகைகள், புதுவகை அலங்காரங்கள் என ஆர்த்தி ஒவ்வொன்றாக மாற்றியவாறே இருந்தாள். அனைத்திலும் அவள் கூறியதை பொம்மை போல கேட்டுக்கொண்டு நடந்தாள் ஸ்மிதா.
ŞİMDİ OKUDUĞUN
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomantizmHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...