காண்பதெல்லாம் நிஜமல்ல

42 1 0
                                    

சென்னையில் ஒரு புகழ்பெற்ற IT கம்பெனியில் கவிதா TL ஆக இருக்கிறாள். அவளுக்கு கீழ் வனிதா அஞ்சனா கொடிமலர் தருண் ஆகாஷ் ஒரு அணியாக பணிபுரிகின்றனர். கவிதா ரொம்ப கண்டிப்பாக ஆக இருப்பாள். குறித்த நேரத்தில் அனைத்தும் சரியாக நடக்கவேண்டும் இல்லாவிட்டால் அந்த நபருக்கு ஏன்தான் இங்க வந்து மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணும்படி ஆக்கிவிடுவாள்.

அபூர்வா அந்த கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு வருகிறாள். மேனேஜர் அவளை கவிதாவிடம் Trainee ஆக அறிமுகப்படுத்துகிறார். கவிதாவும் அபூர்வாவை மற்ற Team mates விடம் அறிமுகப்படுத்தி அவளுக்கான வேலையைப் பற்றி கூறுகிறாள்.

அபூர்வா அன்றோடு வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதமாய் இருக்கும். ஒரு பெரிய ப்ராஜெக்ட்.... அனைவரும் கடின உழைப்பை போட்டுக் கொண்டிருப்பார் ... அதனால் அவளுக்கு ஹாஸ்டலில் இரவு தாமதமாக செல்வதால் பிரச்சினை ஏற்படுகிறது ... தன் நண்பர்களிடம் வேறு ஹாஸ்டல் பார்த்துக் கொண்டிருப்பதாக Lunch break-ல் கூறி கொண்டு இருப்பாள். அப்பொழுது அங்கு வரும் கவிதா இதைக்கேட்டு தனியாக அழைத்து பேசுகிறாள். எல்லா ஹாஸ்டலில் இப்படித்தான் இருக்கும் So தனியாக வீடு எடுத்து தங்கறது இல்லனா எங்கயாச்சும் Paying guest(PG) ஆக Stay பண்ற மாறி பாருங்கன்னு Idea சொல்றாள்.நல்ல இடமாக பார்த்து அபூர்வா தங்குகிறாள். இந்த ஐடியா கவிதா தான் கொடுத்தாள் என்று மற்ற அனைவருக்கும் அறிந்து வியப்பு அடைகின்றனர். ஏனென்றால் கவிதா யாரிடமும் சகஜமாக பழக மாட்டாள் எப்படி இந்த விஷயமறிந்த நல்ல ஐடியா கொடுத்திருக்கா என்றுதான்.

அந்த பெரிய ப்ராஜெக்ட் முடிந்தவுடன் அனைவருக்கும் கம்பெனி சார்பாக Treat வைக்கப்படுகிறது. அங்கு தருண் மது அருந்திவிட்டு கலாட்டா செய்கிறான். அவனை ஆகாஷுடன் Cab-ல் அனுப்பி வைக்கிறாள் கவிதா. Party முடிய Late night ஆகிறது. அதனால் தன் டீமில் உள்ள மற்ற அனைவரையும் தன் வீட்டுக்கு வருமாறு கூறுகிறாள். அவர்களும் ஒத்துக் கொள்கின்றனர்.

வீட்டுக்கு வந்த அனைவருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால் அது இரண்டு அறை கொண்ட தனி வீடு. தன் அம்மாவுடன் 5 வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசிக்கிறாள்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் தன் மகன் அர்ஜுனை தூக்கிக்கொண்டு கொஞ்சி விளையாடுகிறாள்.

கம்பெனியில் மிகவும் கண்டிப்போடு சிரிக்கக் கூட மாட்டாளா என்ற எண்ண வைக்கும் அளவு இருக்கும் கவிதா இங்கு முற்றிலும் வேறு ஆளாக இருப்பதை கண்டு Team mates வியக்கின்றனர். அதைப் பார்த்து கவிதா என்ன Guys அப்படி பாக்குறீங்க. ஆபீஸ்ல நான் சிரிச்சிட்டு வந்தா மத்தவங்களுக்கு பொண்ணுதானே Easy ah சமாளிக்கலாம் ஏமாற்றலாம் அப்படினு நினைச்சாங்க வேலைக்கு நான் சேர்ந்த போது. So அதான் இப்படி இருக்க வேண்டியதா இருக்கு மத்தபடி நான் என் Team கிட்ட மட்டும் சிரிச்சுப் பேசினா Partiality favourism அப்படின்னு சொல்வாங்க.

     நீங்க சொல்றது உண்மைதான் கவிதா. எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும் அப்படி நடந்துக்கணும். அதுக்குன்னு அவங்களுக்கு முரட்டு சுபாவம் தான் அப்படின்னு முடிவு பண்ண கூடாது. அன்பா தான் நம்ப இருப்போம் ஆனா அது அந்த இடத்துக்கு தெரியாது. அந்த இரவு Rest எடுத்து விட்டு அவர்கள் கிளம்பி விட்டனர். ஆபீஸில் கவிதா எப்பொதும் போல் கண்டிபாக நடந்து கொள்கிறாள்.

    நாம் காண்பது மட்டுமே நிஜமல்ல. அன்பை சிரித்து தான் உணர்த்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

     
  
     

Du hast das Ende der veröffentlichten Teile erreicht.

⏰ Letzte Aktualisierung: Nov 13, 2020 ⏰

Füge diese Geschichte zu deiner Bibliothek hinzu, um über neue Kapitel informiert zu werden!

 காண்பதெல்லாம் நிஜமல்ல  ---- Short StoryWo Geschichten leben. Entdecke jetzt