பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை..
அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செட ியில் பெரிதாய் ஒரு பூ..
அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது?
இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க "
"ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்ப ோல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
#2
"இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?"
"அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா..
இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்..
அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
#1
•••
அந்த இரு விழிகள்..
நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன.
அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடை ந்தன.
•••
#4
ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் -----
----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.