தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
NiranjanaNepol
- Reads 91,071
- Votes 4,465
- Parts 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி.
அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?