amrazainab
என்ன மந்திரம் வைத்திருக்கிறாய் உன்னிடம்
உன்னைக் கண்டவுடன் எல்லோருக்கும் பிடிக்கிறது
தனியாக இருக்கும் போது யுகமாகக் கழியும் நாட்கள்
உன் அலைகள் கண்டவுடன் நொடிப்பொழுதாய் மாறுவது ஏனோ,,,
மனதை அழுத்தும் பல சுமைகளுடன ்
உன் மடி தேடி வந்தாலும்,,,
உன் அலைகள் என் பாதம் தொட்டவுடனே
அனைத்தும் மறந்து மாறிவிடுகிறேன் சிறு குழந்தையாக,,,