BlitzkriegKk
- Reads 651
- Votes 100
- Parts 13
வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய்
ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும்
கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற
வான்புக ழோர்கோர நாடு.
அரசியலில் காலமாற்றமே இல்லை. எல்லாக் காலத்திலும் ஆசை, துரோகம், சூழ்ச்சி, வஞ்சம், நட்பு, நம்பிக்கை இவையனைத்தும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆக நிகழ்கால அரசியலுக்கும் வரலாறுகளுக்கும் யாதொரு வேறுபாடும் இல்லை என்பதால் அத்தகைய கூறுகளை அடிப்படையாகக் கொண்டே உருவானது இக்கோரநாடு. கூடவே இடையறாத அன்பும் எழுச்சிபெறும் நம்பிக்கையும் உண்டு..