safrisha
- Reads 8,371
- Votes 255
- Parts 28
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது.
திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல்.
இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது.
அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.