"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெ ரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க "
"ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன்
இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி
இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
ஹாய் இதயங்களே....
இது என் நான்காவது கதை....
கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்)
கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை...
தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்...
காப்புரிமை பெற்ற கதை
நன்றி