கதையின் நாயகி தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது கைகளில் தென்பவளநாடு பற்ற ிய ஓலைச்சுவடி ஒன்று கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அந்த ஓலைச்சுவடியில் பாண்டியர்களின் இரத்தின ஹாரம் மற்றும் மணிமகுடம் பற்றியும் சோழர்கள் மறைத்து வைத்து இருக்கும் பொக்கிஷம் பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து நமது கதையின் நாயகி மேற்கொண்டு என்ன செய்கிறார் என்பதே இக்கதை ஆகும்.
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே.
கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?