Madhu_dr_cool
- Reads 944
- Votes 98
- Parts 10
பத்தி எழுதுதல்.
சுஜாதா முதல் வைரமுத்து வரை நான் பார்த்து வியந்த உப திறமையில் ஒன்று, பத்தி எழுத்து. (roughly translates to blog writing, but has minor differences).
கற்றதும் பெற்றதும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், எல்லாம் படிச்சிட்டு, தூங்காம யோசித்ததுண்டு, என்னைக்கு இதேபோல நாமும் நம்ம வாழ்க்கையை பத்திகளில் வடிக்கப் போறோம்னு. சொல்ற அளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கலை என்பது, இந்த வருஷம் மாறிடுச்சு. சொல்ல இப்ப நிறைய இருக்கு.
கதைகள், கவிதைகள் அல்லாமல், உரைநடையாக எழுதும் எழுத்தமைப்பு. முன்னுள்ள அத்தியாயத்திற்கும் மற்றதற்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாத கோர்ப்பு. சில நேரங்களில் தத்துவங்கள், சில நேரங்களில் தர்க்கங்கள். இதுவே சாராம்சம். உள்ளே போலாமா?
** note: entirely based on my life experiences. No plagiarism. No exaggerations.