bivima
பனி நிலவும் உருகுதடி பெண்ணே
உன் சுட்டெரிக்கும் பார்வையினாலே
சூரியனும் சுழலுதடி
உன் காந்தப் பார்வை படுகையிலே
பிரம்மன் படைப்புகளும் அழகில்
தோற்றதடி உனதழகில்
குளிர் காற்றும் நடுங்குதடி
உன் மூச்சுக் காற்றில்
ஆண்மைக்கும் வெட்கம் வருமோ
உன் பார்வையில்
உனதழகும் ஓர் அழகே என்று
நினைத்தான் பிரம்மன் பாவம்
அவனும் அறியவில்லை
அவனைவிடப் பெரியது உனதழகு என்று