புதுதில்லி: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் மற்றும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக மற்றும் ஆந்ந்திர அரசு தொடுத்திருந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மற்றும் மதுபான கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் 500 மீட்டர் தொலைவு என்பதை 100 மீட்டராக மாற்ற வேண்டும் என்றும் தமிழக மற்றும் ஆந்திர அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. மேலும் வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் Todos los derechos reservados