புது தில்லி: ஆதார் அட்டை எண் மற்றும் அதில் இணைக்கப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் கசிந்தது உண்மையே என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தனி நபர்களின் முக்கிய தகவல்கள் அடங்கிய ஆதார் தகவல்கள், இணையம் வாயிலாக கசிந்ததை மோடி தலைமையிலான மத்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆதார் தகவல்கள் திருடப்படலாம் என்றும் அதன் பாதுகாப்பில் இன்னும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்றும் வந்த ஏராளமான எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அரசு, தற்போது தகவல்கள் கசிந்திருப்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளது. மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மார்ச் 25ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில், ஆதார் தகவல்கள் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண், அந்த நபரின் பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், முகவரி போ
1 part