Highest rank : #2 in Thriller.
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் விரிவாக எழுதப்பட்டது.
த்ரில்லர் கதை என்றதும் என் நினைவுகளில் முதலில் வந்தவர் கறுப்பு வெள்ளை படத்தில் என்னுடைய பேவரைட் ஹீரோ தி கிரேட் சவுத் இண்டியன் ஜேம்ஸ் பான்ட் உயர்திரு.ஜெய்சங்கர் அவர்கள் தான். விறுவிறுப்பாக செல்லும் அவருடைய படங்களுக்கு நான் தீவிர ரசிகை. பாடல்களும் சான்ஸே இல்லை சச் எ பியூட்டிஃபுல் ரொமான்டிக் கலெக்ஷன்ஸ். இக்கதையின் ஹீரோவுக்கு அவர் பெயரை தான் வைத்துள்ளேன்.
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம்.
என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்? கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ்வைத் தொடர்வதா? அல்லது திரும்ப இயலாத நதிச்சுழலில் கால்வைத்துப் பார்ப்பதா?