காத்திருப்பின் சுகம் அலாதியானது.. ஆனால் யாருக்காக எதுக்காக காத்திருக்கிறோம் என்பதிலே தான் அதன் சுகம் இருக்கிறது. .
பல நேரங்களில் பல விஷயங்களுக்காகவும் பல மனிதர்களுக்காகவும் காத்திருந்தது உண்டு. ஆனால் அவளுக்கான என் காத்திருப்பின் சுகம் அலாதியானது. அவள் வருவாளா மாட்டாளா என எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்திற்கும் இடைப்பட்ட காத்திருப்பின் சுகத்தை உணரச் செய்தவள்.
அவள் எனக்கானவள் இல்லை ஆனால் அது ஒரு போதும் என் காத்திருப்பின் சுகத்தை குறைத்ததில்லை.
பல சமயங்களில் நேர தாமதமாகவும், சில சமயங்களில் அவள் வராமலும் இருந்ததுண்டு..ஆனால் நான் அவளுக்காக காத்திருக்காமல் இருந்ததில்லை..
அவள் நலிவடைந்த அரச குடும்பத்தின் இளவரசி போன்றவள். பாதுகாவலர்கள் இன்றி ஒரு நாளும் அவளை கண்டதில்லை.
வறுமையின் வெளிப்பாடு அவளின் தோற்றத்தில் இருந்தாலும், கம்பிரமா