ஞானமே உருவான, சிவசக்தி ஸ்வரூபமான முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் வரிசையில் தோன்றிய தெய்வீக அடியவரே திருத்தங்கல் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் ஆவார் . சிலப்பதிகாரத்தில் பாடல் பெற்றதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பாதை வேறானாலும் நாம் அடையப்போகும் இறை ஒன்றே என்று உணர்த்த, வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக ஒரே மலையில் ம க்கள் ஒற்றுமையுடன் வழிபட - ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருத்தலமாகவும், ஸ்ரீ கருநெல்லிநாதர் திருத்தலமாகவும் அமையப்பெற்றத் திருத்தலம் திருத்தண்கால் என்றச் சிறப்புமிக்கத் திருத்தங்கல் நகர் ஆகும். சிவகாசிக்கு மிக அருகில் உள்ள தலம் இது.
கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை.
'''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அவள் மனதில் குற்றவுணர்ச்சி என்றால்; இவள் மனதில் பழிவாங்கும் வெறி. அவள் மனதில் சந்தேகம், கலக்கம் என்றால்; இவள் மனதில் குரோதம், அதிர்ச்சி._'''