மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள்.
"அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான்.
அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இருக்கும் உணர்வுகள் என்று நினைத்து பார்த்தாலும் இதழ்களில் ஒரு புன்னகையை தர தவறுவதில்லை. அவர்களுக்கு இடையே ஒரு வித வெட்கம், தயக்கம், ஏக்கம், சிலுமிஷம், சந்தோஷம் சொன்னால் புரியாது.
நம்ம கதையில் அது மெயின் ட்ராக் இல்லை. மாப்பிள்ளைக்கும் பெண்ணின் தங்கைக்கும் இடையேயான ஒரு பரிசுத்தமான, அழகான, நம்மை பொறாமை பட வைக்கும் உறவு பற்றிய கதை.
தமிழில் புலமை என்றெல்லாம் இல்லை. ஏதோ தாய்மொழியில் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை.
பிடித்தால் vote செய்யவும். கண்டிப்பாக