அம்பு விழி வம்பு பண்ணுதே அழகே ! மை இட்டு மறுபடியும் கொல்லாதே ! உற்று பார்த்து உயிரை வாங்காதே ! போதுமடி இமை அடி வரு முறை நோகுது இதயம் இரண்டு விழி அம்புகளை ஒற்றை இதயத்தில் விடாதே குச்சிகளால் கூர்மை செய்து குத்தி விட்டு வேடிக்கை பார்க்காதே ! கத்தி பார்த்தும் சத்தம் இங்கு கேட்காதே ! தொல்லை தாங்கலியே வந்து என்னை ஆட்சி கொள் இல்லையெனில் நீயே என்னை கொல் !!All Rights Reserved