என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...(CC) Attrib. NonComm. NoDerivs