ஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால் அது இரவு. சிறிது வெளிச்சம் கூட இல்லை. நான் தனியாக ஒரு இடத்தில் நிற்கிறேன். அந்த இருட்டிலும் கூர்ந்து கவனித்தால் என்னை சுற்றிலும் எண்ணிக்கை இல்லாதா மரங்கள் என் கண்ணுக்கு தென்ப்பட்டது. அது ஒரு அடர்ந்த காடு. மர்மக்காடு என்று வைத்துக்கொள்ளலாம். மரங்களை பார்த்தாலே போதும் மரணத்தை மண்டிப்போட்டு கேப்பீர்கள் என்றளவில் இருக்கும். தொடு வானத்தை தொட்டு வரும் அளவில் அப்படி வளர்ந்து உயரமாக உள்ளது. அதற்கு நான் வைத்த பெயர் வானரம