இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
53 भाग पूर्ण வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியா த ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...