23 parts Complete ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான்.
ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்.
அஸ்வினுக்கோ புரியவில்லை அவளது செயல், கூச்சம் கொள்கிறாளோ என எண்ணி ஏன் என்றான் தலையை அசைத்தே சந்தேகமாக. இதழ் துடிக்க கைகளை அகலமாக விரித்து காட்டினாள்.
அவளது அன்பினில் உடல் சிலிர்த்தவன் தலை குனிந்து இதழ் கடித்து சிரித்து, அதே வெட்கத்தோடு சுற்றம் பார்த்தான்.
வீட்டினுள் இருந்த அதே கூட்டம் இல்லை என்றாலும் குறைந்தது பத்து பேர் இருந்தனர், அத்தனை பேர் பார்வையும் இவர்கள் மேல் தான், என்ன செய்கின்றனர் என்கிற ஒரு வினோத வேடிக்கை எண்ணம்.
இவர்களுக்காக அவனது பட்டாம்பூச்சியின் கட்டளையை செய்யாமல்