அவருடைய அருகாமையில் வாழ்ந்து, அவரை உள்வாங்குவது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே - என்பது ஓளவை வாக்கு. இப்போது... வாழும் அவதாரப் புருஷர் பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிஜியுடன் வாழும் பெரும் பாக்கியசாலிகள் சொல்லும் வாக்கு... தானமும் தவமும் தான்செய்வ ராயினும் அவதார நிகழுங்கால் இருத்தல் அரிது இருத்தலினும் பார்த்தல் அரிது பார்த்தலினும் உடனுறைந்து உள்வாங்கல் அரிது உடனுறைந்து உள்வாங்கல் செய்வ ராயின் வானவர் நாடு ஈங்கமைந் திடுமே! பக்தி சேவையில் நித்யானந்த பீடம்