என்னுடைய வரலாற்றை, அது நிகழ்ந்த பிறகு நான் உங்களுக்குச் சொல்லவில்லை, நான் ஏற்கெனவே எழுதி வைத்ததையே செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான், 'இந்த வயதில் ஞானமடைந்தேன்' என்று சொல்வதுகூட, உங்களுடைய புரிதலுக்காகவே! எல்லாமே என்மேல் ஒரு திரையில் எழுதப்பட்டிருப்பதுபோல் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஒரு திரை உயிருடன் இருந்தால், அது எப்படி தன்மீது காட்டப்படும் காட்சிகளைக் காண முடியுமோ, அதேபோல் நான் பிறக்கும்போதே, 'நான் இந்த உடலுக்குள் இப்படித்தான், இந்த நேரத்தில்தான் நுழைகிறேன், இந்த உடலை இப்படித்தான் இயக்குகிறேன்' என்பதையெல்லாம் தெளிவாகப் பார்த்தேன். - தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்