தீட்சை சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அடையவதற்கான வாழ்க்கை முறைகளையும், தீட்சை முறைகளையும் சிவபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள்தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கிட்டியதாலும் சிவபக்தர்களுக்கு இது வாழ்க்கைமுறை என்பதாலும் இதற்கு "ஆகமம்" என்று பெயர். இதில் சமயதீட்சை என்னும் இந்த சதாசிவதீட்சையை பற்றி உரைக்கும் பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார். இது சிவனடியார்கள், சிவபக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்களுக்கான, ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும். இந்த சதாசிவதீட்சையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள், பெண்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாகAll Rights Reserved
1 part