எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.All Rights Reserved