இன்னும் அவன் அமர்ந்திருந்த கோச்சில் யாரும் ஏறாததை கண்டு பெருமூச்சு விட்டவன் புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தான். கதை நடந்த இடத்துக்கே சென்றவனை " டோன்ட் வொர்ரி பா. ஐ கேன் மேனேஜ்" என்ற ஒரு இனிய குரல் பிடித்து இழுத்து வந்து அந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ்ஸில் மீண்டும் அமரவைத்தது. அந்த குரலுக்கு சொந்தகாரியை திரும்பி பார்த்தவன் உதடுகள் அவன் அறியாமல் உச்சரித்த வார்த்தை ' ஏஞ்சல்' வெள்ளை நிற லாங் டாப் அணிந்து தோளில் பேக்குடன் நின்றவள் " ஹலோ மே ஐ சிட் ஹியர்??" என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அந்த வெள்ளையுடை தேவதையையே பார்க்க அவளோ தான் அங்கு அமர்வது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று அவனை பார்த்தாள். இரயில் பயணத்தில் ஆரம்பிக்கும் ஒரு சிறிய அழகான காதல் கதை...All Rights Reserved