மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன்.
ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால் பினைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் மந்திர சக்தி கொண்ட சிவப்பு நிற கல்,
மந்திர கல்லானது நூறு வருடத்திற்க்கு ஒரு முறை தன் சக்தியினை இழக்கும், அந்த மந்திர கல்லிற்க்கு மீண்டும் சக்தியினை அளிக்க வேண்டும், அந்த கல் தனது சக்தியை இழக்கும் நாளிற்காக தன் படையுடன் காத்திருக்கிறான் அகோரன்...
அகோரன் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றுவானா.? அவ்வாறு கைப்பற்றினால் தேவதைகளின் நிலை தான் என்ன.....?
வாருங்கள் நாமும் பயணிப்போம்.....