அதே போல் அன்றும் அவன் நின்றிருந்தான். அவள் எதிர்பார்த்தது போலவே, அங்கு அவள் மட்டும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கவில்லை, சுற்றியுள்ள பெண்கள் கூட்டமும் தான். அவனுக்கும் தெரியும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று. அதனை கண்டுக்கொள்ளாதவன் போல கண்ணாடியில் தலையை சரி செய்து தனது வண்டியில் ஏறி பறந்துவிட்டான். இங்கு அவளுக்கோ மனம் பதைப்பதைத்தது. அடுத்து எப்பொழுது அவன் வருவான் என?