23 parts Complete #2
"இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?"
"அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா..
இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்..
அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.