வாழ்க்கையின் பக்கங்கள் ஒவ்வொன்றும் அழகான வரிகளில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது..
ஆனால் மானிடராய் பிறந்த சிலருக்கு மட்டுமே அந்த பக்கங்களையே எழுதும் ஆற்றல் உள்ளது...
சிற்பி உளி கொண்டு செதுக்கும் சிற்பத்தை போன்றே, ஒவ்வொரு எழுத்தாளனும், கவிஞனும், கதாசிரியரும் ஓர் படைப்பை படைத்து இப்புவியில் உளாவ விடுகின்றனர் .. வாழ்க்கையின் எதார்த்தத்தை வரி வடிவத்தில் நம்மிடம் சமர்ப்பிக்பின்றனர்... அவர்களுக்காக இது, புரிந்து கொண்டவர்கள் எழுதப்போவதை வாசியுங்கள், அறியாமல், அறியாமையில் இருப்பவர்கள் இதனை வாசித்து நிதர்சனத்தை உணருங்கள்....
இந்த வரிகளும், இனி எழுதப்போகும் வரிகளும் யாரையும் காயப்படுத்த அல்ல, காயங்களினால் அல்லாடும் மனங்களை உணர வைப்பதற்கே... 🙏❤