கிராமிய காதல் 👩❤️👨
சொல்லடி கில்லாடி உன் காதலின் கவனிப்பு வளைக்குள் என்ன கஞ்சம் செய்தாய் தினம்தினம் தாகத்திற்கு பற்றாக்குறை பண்டமே அளிக்கிறாய்-ஆனால் பற்றாக்குறை தானே பதம்தீட்டுது தினமும் உன்னை தொல்லையாய் கார்மோன் கட்டிலில்!
மாமானு சொல்லுறப்ப அவளோட குறலுல இருக்க காதலு அவன் காதுக்கு கல்லாச்சாரயம் காட்டம் காட்டும்!
என்னங்கனு எகத்தாலமா சொல்லுவா, அத எங்கையோ நின்னு அவன் கேட்பான் - என்னடினு அவன் கேட்க எட்டி குதுச்சு எரவாரத்துக்குள்ள போயி எட்டி பார்ப்பா எட்டு பல்லு தெரிய வெட்கப்பட்டுட்டு!
கோவத்துல நாலு பேச்சு பேசிட்டு ரெண்டு முகமும் தெக்கு வடக்கு திசை காட்டிக்கும் - கோவம் கொறஞ்சதும் குணம் அழப்புவிடும் மாறி மாறி பேசறக்கு - மறுபடி ஒரு சிறுசண்டை கட்டி அச்சண்டை மறச்சுட்டு அகம் பார்த்து முகம் பார்த்து ரெண்டும் முனகிக்கும் சிரிச்சுட்டு!
அப்பப்போ வர சண்டைக்கு அவளோட ஆத்தா அப்பன் அப்படி வச்சுட்டாங்கனு உதாரணம் ஆக்குவது அவளோட அழகு - சண்டைல சாடையா அவன்ட சமாதானத்துல சொல்லுவா~ நீ என் உசுரு டா,உன்னவிட்டா யாரு இருக்க,உனக்கு நான் மட்டுந்தான் எப்பவும்னு!
அவ கையி பட்ட சோறு, அவன் இதழ்லொட்டுச்சுனா சுவையறியறது முதல்ல அவன் நாவல்ல, அவளின் கண்ணின் கருவிழி காட்சினு சொல்லலாம்!
-மதன் மதி