வேண்டாம் தற்கொலை
உயிரை அமுதாக்கிய அன்னையை
மறந்தாயோ???
உன் ஆசைகளுக்காய் தன்னையே
இழந்த தந்தையை மறந்தாயோ???
மருத்துவம் இல்லையேல் பொறியியல்
பொறியியல் இல்லையேல் இயந்திரவியல்
இயந்திரவியல் இல்லையேல் வழக்கறிஞர்
பல துறைகள் இங்கிறுக்க
மரணத்தை ஏற்றாயோ????
எங்கே உனது தைரியம்???
எங்கே உனது நம்பிக்கை???
வீரனாய் வாழ்வதை விடுத்து
கோழையாய் மாறியதேன்???
மலிவு அரசியலுக்கு பலியாய் ஏற்றாயா ???
உன்னை...
சாகத் துணிந்த நீ வாழ மறந்ததேன்
யார் தந்தது அதிகாரம் உயிரை விட
????
உன்னில் உனக்கே இல்லை உரிமை
பத்தில் பதினென்றாய் சாவதைவிட
உனக்காய் வாழ்பவர்காய் உயிரோடிரு
தாய்க்கு மகனாய் / மகளாய்
தந்தைக்கு தனயனாய்
உற்றோருக்கு உறவினராய் உயிரோடிரு
வேண்டாம் இனியொரு மரணம் (நீட்)
Tous Droits Réservés
Rejoignez la plus grande communauté de conteursObtiens des recommandations personnalisées d'histoires, enregistre tes préférées dans ta bibliothèque, commente et vote pour développer ta communauté.